Skip to content
Home » குளித்தலை அருகே கணக்குப்பிள்ளை புற்று மாரியம்மன் கோவிலில் அழகுக்குத்தி பக்தர்கள் நேர்த்திகடன்..

குளித்தலை அருகே கணக்குப்பிள்ளை புற்று மாரியம்மன் கோவிலில் அழகுக்குத்தி பக்தர்கள் நேர்த்திகடன்..

  • by Senthil

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கணக்குப்பிள்ளை புற்று மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியை முன்னிட்டு பால்குடம் தீர்த்த குடம் மற்றும் 1008 அலகு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 18 ஆம் ஆண்டு திருவிழாவினை முன்னிட்டு குளித்தலை கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் புனித நீராடிய நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் தீர்த்த குடம் எடுத்தும் 1008 அலகு

எடுத்தும் மேளதாளங்கள் முழங்க குளித்தலையில் இருந்து கணக்கப்பிள்ளையூர் வரை சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு ஊர்வலமாக நடந்து வந்தனர்.

கோவிலில் வந்தடைந்ததும் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டினர். மேலும் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் விழா கமிட்டியினர் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!