Skip to content
Home » ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் விமரிசையாக நடந்த ‘தூக்குத் தேர் திருவிழா…

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் விமரிசையாக நடந்த ‘தூக்குத் தேர் திருவிழா…

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூரில் தாழம்பூ ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழாவில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடித் திருவிழா கடந்த 9ம் தேதி கம்பம் நடுதல் காப்பு கட்டுகளுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் பக்தர்கள் அதிகாலையில் காவிரியில் நீராடி தீர்த்தம் எடுத்து வந்து கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து 23ஆம் தேதி இரவு காவிரி ஆற்றில் இருந்து கரகம் பாளையத்து கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நாளான இன்று தூக்குத் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து

கருப்பத்தூரில் உள்ள ஊர் பொதுமக்கள் சார்பில் திருத்தேருக்கான பல வண்ண மலர் மாலைகள் மேளதாளமாக கொண்டுவரப்பட்டு திருத்தேர் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டன.

சிறப்பு அலங்காரத்தில் அம்மன் உற்சவர் எழுந்தருளிய பல வண்ண மலர்கள் வாழை கரும்பு மா ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட 20 அடி உயரம் உள்ள தூக்குத்தேரினை நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் தோழி சுமந்து கருப்புத்தூரின் முக்கிய வீதிகள் வழியாக பட்டாசுகள் வான வேடிக்கைகள் முழங்க, மேளதாளங்களும் முழங்க நடனமாடி குதுகளித்து ஊர்வலமாக வந்தனர். வழி நெடுங்கிலும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய் பழம் உடைத்தும், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!