கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி கிராமம், அரசு காலணி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் நவக்கிரக ஆலயத்தில் 34 ஆம் ஆண்டு சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு சுவாமி கிணற்றிலிருந்து அக்னி சட்டி, பால்குடம், கரும்புத் தொட்டில் உள்ளிட்ட நேர்த்திக்கடனை பக்தர்கள் சிறப்பாக செய்தனர். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமி கிணற்றில் பக்தர்கள் நீராடிய பிறகு அங்கு அக்னி சட்டி மற்றும் பால்குடம் ,கரும்புத் தொட்டில் உள்ளிட்ட நேர்த்திக்கடனை செய்ய ஏற்பாடுகள் செய்தனர்.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் புற்றுக்கண் மாரியம்மன் க்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து சுவாமி கிணற்றிலிருந்து மேல தாளங்கள் முழங்க பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம், கரும்புத் தொட்டில் உள்ளிட்ட
சுமந்தவாறு முக்கிய வீதியில் வழியாக வளம் வந்து ஆலயம் வந்து அடைந்தனர். அதை தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலால் மூலவர் புற்றுக்கண் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் அனைவருக்கும் விபூதி பிரசாதம் வழங்கிய பிறகு அன்னதானமும் வழங்கப்பட்டது. அரசு காலணி அருள்மிகு ஸ்ரீ புற்றுக்கண் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சித்திரை மாத திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.