திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவில் வைகாசி தேரோட்ட விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்ற விழா நடைபெற்றது.
சோளவள நாட்டின் காவிரி நதிக்கு வடபால் அமைந்துள்ள தேவாரம் பெற்ற ஆலயங்களில் 62 வது ஸ்தலமும் வன்னி வனம் என பெயர் வாய்ந்ததும் அன்னமாம் பொய்கை என்னும் புண்ணிய தீர்த்தத்தை உடையதும் பாலாம்பிகையை மனம் புரிந்த ஈசன் தனது அருள் சக்தி தேவியின் பாதச் சிலம்பின்றும் சிலம்பு நதியை பெறுகச்
செய்ததும் ஆன திருவிளையாடல் நிகழ்த்திய புண்ணிய ஸ்தலமாகும்.
இந்நிலையில் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவில் வைகாசி தேரோட்ட விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்ற விழா நடைபெற்றது. முன்னதாக காலையில் விக்னேஸ்வர பூஜை, புண்ணிய வாசனம் இரண்டாம் கால விருஷய யாகம் கொடி படத்துடன் ஆலயத்தைச் சுற்றி திருவீதி உலா வந்து கொடி மரத்தை சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து கொடி மரத்திற்க்கு பல்வேறு பூஜைகளுக்குப் பிறகு கடக லக்னத்தில் கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலையில் அபிஷேக ஆராதனையும் இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்வான வைகாசி தேரோட்ட விழா வருகின்ற ஜூன் 1 ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையில் கோயில் பணியாளர்கள், கோயில் குருக்கள்கள், பக்தர்கள், கிராம மக்கள் செய்து இருந்தனர்.