இந்திய கிரிக்கெட் வீரர் சர்ப்ராஸ்கான் பெங்களூரில் நடந்த டெஸ்டில் நியூசிலாந்துக்கு எதிராக 150 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இவரது மனைவி ரொமானா சகூருக்கு நேற்று நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில் குழந்தையுடன் சர்ப்ராஸ்கான் போஸ் கொடுக்கும் படம் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. சர்ப்ராஸ்கான் மகாராஷ்டிராவை சேர்ந்தவர். கடந்த ஒரு வருடத்திற்கு முன் அவருக்கு திருமணம் ஆனது. இன்று சர்ப்ராஸ்கானுக்கு 28வது பிறந்த தினம். ஒரு நாளுக்கு முன்னதாக அவருக்கு மகன் பிறந்துள்ளான்.
