பெரம்பலூர் மாவட்டம் , வேப்பந்தட்டை வட்டம், (பெரம்பலூர் ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலை) உடும்பியம் அடுத்துள்ள லத்துவாடி பிரிவு சாலை அருகே புள்ளி மான் வாகனத்தில் அடிபட்டு இறந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் பலமுறை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் மற்றும் மாவட்ட
நிர்வாகம் உடனடியாக ஒளிரும் பட்டையுடன் கூடிய அறிவிப்பு பலகை நிறுவ வேண்டும். வனவிலங்குகள் நடமாடும் பகுதி என அறிவிப்பு பலகை இருக்கும் பட்சத்தில் வாகன ஓட்டிகள் நிதானமாக செல்ல ஏதுவாகவும் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க உதவியாக இருக்கும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.