Skip to content
Home » தேசிய தடகளத்தில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனைகளுக்கு வரவேற்பு

தேசிய தடகளத்தில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனைகளுக்கு வரவேற்பு

  • by Senthil

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி ,வெண்கலம் வென்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த செப்டம்பர் 22 முதல் 26 ம் தேதி வரை தேசிய அளவிலான கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இந்த விளையாட்டு போட்டியில் பல்வேறு  மாநிலங்களில் இருந்தும் விளையாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இதில்  திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த தடகள விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

17 வயதினருக்கான தடகள விளையாட்டு பிரிவில் பவதாரணி 800 மீட்டர் முதல் இடம் (தங்கம்) 1500 மீட்டர் முதல் இடம் (தங்கம்) 4×100 மீட்டர் ரிலே முதல் இடம் (தங்கம்) பதக்கங்களையும் 14 வயதினருக்கான தடகள விளையாட்டு பிரிவில் கிர்த்திகா 200 மீட்டர் முதல் இடம் (தங்கம்) 400 மீட்டர் முதல் இடம் (தங்கம்) 600 மீட்டர் முதல் இடம் (தங்கம்) 4 ×100 ரிலே இரண்டாம் இடம் (வெள்ளி) பதக்கங்களை வென்றனர் ..

வெற்றியுடன் திரும்பிய  வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் பயிற்சியாளர் விளையாட்டு வீரர்கள் பெற்றோர் பல்வேறு சமூக நல அமைப்புகள் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் ஆர். கோவிந்தராஜ், ரயில்வேதுறை அலுவலக கண்காணிப்பாளரும் தேசிய தடகள விளையாட்டு வீரருமான தமிழரசன் , தடகள பயிற்சியாளரும் அஞ்சல் துறை ஊழியருமான முனியாண்டி, அமிர்தம் அறக்கட்டளை தலைவர் யோகா விஜயகுமார் , மாற்றம் அமைப்பின் நிறுவன தலைவரும் தேசிய மாநில அளவில் விருதுகள் பெற்ற குறும்படத்தின் நடிகரும் இயக்குனருமான ஆர்.ஏ.தாமஸ் மற்றும் திரளான விளையாட்டு வீரர்கள் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!