Skip to content
Home » விளையாட்டுப் போட்டி.. சாம்பியன்சிப் வென்று பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் சாதனை…

விளையாட்டுப் போட்டி.. சாம்பியன்சிப் வென்று பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் சாதனை…

புதுக்கோட்டையில் மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே நடந்த விளையாட்டுப் போட்டியில் தஞ்சை அருகே வல்லம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பை வென்று சாதனை படைத்துள்ளனர்.

புதுக்கோட்டை அருகே சுப்பிரமணியன் பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல அளவில் 2 நாட்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில் தஞ்சை அருகே வல்லம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். இதில் கைப்பந்து மற்றும் எறிபந்து போட்டிகளில் முதல் இடத்தை பிடித்து வெற்றிப் பெற்றனர்.

இதேபோல் வளைபந்து மற்றும் பூப்பந்து போட்டிகளில் 2ம் இடமும், கபாடி மற்றும் கோகோ போட்டிகளில் 2ம் இடமும் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பை வென்றனர். போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு விளையாட்டு குழுவினர் சார்பில் 6 கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து வல்லம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் கல்லூரி முதல்வர் முனைவர் ஹேமலதா பாராட்டுக்களை தெரிவித்தார். இதில் பேராசிரியர்கள் மற்றும் விளையாட்டுத் துறை ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.