Skip to content

கரூரில் விளையாட்டு போட்டி… மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி…

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டி மாவட்ட அளவில் நடைபெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இன்று கரூர் கோவை சாலையில் உள்ள பிரேம் மஹால் திருமண மண்டபத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்பொழுது விழாவில் பேசிய மின்சார துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி-

இந்த விளையாட்டுப் போட்டி ஆண்டுதோறும் நடைபெறும் எனவும் ஆகவே மாணவ, மாணவிகள் விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும்.

எனவும் மேலும் விளையாட்டுப் போட்டியில் வெளியூர் செல்லும் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பேருந்து மற்றும் ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் வெளியூர் சென்று விளையாடும் விளையாட்டு வீரர்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தங்களது விவரங்களை தெரிவித்து பயனடைய வேண்டுமென மின்சார துறை அமைச்சர்கள் வி.செந்தில் பாலாஜி மாணவர்கள் மத்தியில் கோரிக்கை வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக மாணவ, மாணவிகளின் வேண்டுகோளை ஏற்று மின்சாரத்துறை அமைச்சர் வீ சேது பாலாஜி செல்பி எடுத்தார்.அப்பொழுது மாணவ, மாணவிகள் ஆரவாரம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு கோப்பைகளையும் உதவி தொகையும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திருங்கரர்களால் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

error: Content is protected !!