Skip to content
Home » வாரிசு, துணிவு சிறப்பு காட்சிகள் ரத்து…. அரசு உத்தரவு

வாரிசு, துணிவு சிறப்பு காட்சிகள் ரத்து…. அரசு உத்தரவு

பொங்கல் திருநாளையொட்டி  விஜய் நடித்த வாரிசு,அஜீத் நடித்த  துணிவு திரைப்படங்கள்  திரைக்கு வருகிறது. வழக்கமாக  பொங்கல், தீபாவளியையொட்டி தமிழகத்தில் சிறப்பு காட்சிகள் திரையிடப்படும். இந்த ஆண்டு  பொங்கல் திருநாளையொட்டி 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை அதிகாலை 4 மணி மற்றும் 5 மணிக்கு  சிறப்பு காட்சிகள் நடத்த அரசு அனுமதி வழங்கி இருந்தது.

இந்த நிலையில் இன்று சிறப்பு காட்சிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை அரசு  ரத்து செய்துள்ளது.  அத்துடன் சினிமா தியேட்டர்களில்  நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது   மிக அதிக உயரத்தில் பேனர் வைப்பது போன்றவற்றுக்கும் அரசு தடை விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!