Skip to content
Home » இந்தியர்களை அழைத்து வர இஸ்ரேல் சென்ற சிறப்பு விமானம்…

இந்தியர்களை அழைத்து வர இஸ்ரேல் சென்ற சிறப்பு விமானம்…

  • by Senthil

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது.இதில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து உள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். இந்த சூழலில் இஸ்ரேல் நாட்டில் இந்தியர்கள் பலர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில்,”ஆபரேஷன் அஜய்” திட்டம் மூலம் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது. இதற்கான சிறப்பு விமானம் இன்று இஸ்ரேல் சென்றுள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்த பாக்சி கூறியதாவது, இன்று இரவு சிறப்பு விமானம் டெல் அவிவ் சென்றடையும். இதில் 230 பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 18,000 இந்தியர்கள் இஸ்ரேலில் உள்ளனர். அங்கு மோதல்கள் நடந்து வருகின்றன. அது கவலைக்குரிய விஷயம். இஸ்ரேலில் காயமடைந்த ஒரு இந்தியருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இஸ்ரேலில் இதுவரை எந்த ஒரு இந்தியரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!