ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், வைகுண்ட ஏகாகதசி பெருவிழா பகல் பத்து உற்சவ 6ம் நாளையொட்டி இன்று(புதன்கிழமை) காலை ஸ்ரீ நம்பெருமாள், சிக்குத்து ஆடை கொண்டை, கலிங்கத்துரை, வைர காதுகாப்பு, வைர அபயஹஸ்தம், புஜகீர்த்தி, மகாலெட்சுமி பதக்கம், பவளமாலை முத்துச்சரம், பருத்திக்காய் காப்பு மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
