Skip to content
Home » தீபாவளிக்கு 14,016 பஸ்கள் …. அமைச்சர் சிவசங்கர் தகவல்

தீபாவளிக்கு 14,016 பஸ்கள் …. அமைச்சர் சிவசங்கர் தகவல்

  • by Senthil

தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி  கொண்டாடப்படுகிறது.  இதற்காக மக்கள்  தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள். தீபாவளியை ஒட்டி சென்னையிலிருந்து 11,176 பேருந்துகளை இயக்க  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்  திட்டமிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக 14,016 பேருந்துகள் இயக்கப்படும்.

பயணிகள் வசதிக்காக 24 மணிநேர கட்டுப்பாட்டு மையம் திறப்பு. 9445014436 என்ற எண்ணில் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை உறுதி. மக்கள் கூடுதல் கட்டணம் குறித்து 18004256151 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.

போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்கும் எந்த திட்டமும் இல்லை.

சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கம்.

வரும் 24-ஆம் தேதி ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.தீபாவளி பயணத்திற்கு இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தீபாவளியின்போது மக்கள் வசதிக்காக தனியார் பேருந்துகளை ஒப்பந்தத்திற்கு எடுத்து அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில் இயக்கப்படும் .

அக்டோபர் 28 முதல் 30 வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,910 பேருந்துகள் இயக்கப்படும். நவம்பர் 2 முதல் 4 ம் தேதி வரை சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப 9,441 பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

இந்த தகவலை போக்குவரத்து துறை அமைச்சர்  சிவசங்கர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!