அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆலந்துறை திருக்கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா திருவிழாவில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில், சிவாலயங்களில், ஆருத்ரா தரிசன திருவிழா நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோவிலில், அருந்தவ நாயகி உடனுறை ஸ்ரீ ஆலந்துரையார் சுவாமியின்ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுவாமி ஆலந்துறையர் மற்றும் சிவகாமி அம்மையார் ஆகியோருக்கு, பால், தயிர், இளநீர், மஞ்சள், பன்னீர், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர்
நடராஜர் வடிவில் சிவபெருமான் காலை தூக்கி நடனமாடி, சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஆருத்ரா தரிசன காட்சி அளித்தார்.
பின்ன சிவகாமி அம்மை சமேத ஆலந்துறை சுவாமிக்கு கற்பூர ஆரத்தி, கும்ப ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, மகாதீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் நடராஜர், அம்பாளுடன் சேர்ந்து திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.