Skip to content
Home » கரூர்… பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூர்… பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி, அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு காலபைரவருக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் காலபைரவருக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்து வடை மாலை சாற்றிய பிறகு உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவர் சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!