சட்டமன்ற நடவடிக்கைகள் இன்று நிறைவடைந்ததும், சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சில மாநிலங்களில் உரை வாசிக்க கவர்னரை அழைப்பதில்லை. நாங்கள் மரபுபடி கவர்னரை அழைக்கிறோம். இந்த உரையில் திருத்தங்கள் செய்யும்படி கவர்னர் எதையும் சொல்லவில்லை. உரைக்கு ஒப்புதல் அளித்தி்ருந்தார். அனைத்து மரபுகளும் இங்கு பின்பற்றப்படுகின்றன. உண்மைக்கு மாறான கருத்துக்கள் உரையில் இடம் பெறவில்லை. தேசிய கீதம் வாசித்து தான் கவர்னரை வரவேற்கிறோம். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தான் பேரவையை தொடங்குவது மரபு. சபையில் ஆளுநர் பேசிய கருத்துக்கள் நீக்கப்படுகிறது.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:
தென் மாநில ஆளுனர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் மக்கள் நலனுக்கு எதிராக உள்ளன. ஆளுநருடன் சுமூகமாக இருக்கவே வுிரும்புகிறோம். தேசிய கீதம் முடியும் வரை இருந்திருந்தால் அவருக்கு உரிய மரியாதையுடன் அனுப்பி இருப்போம். கவர்னரின் நடவடிக்கையால் இந்தியா கூட்டணி வலுவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாஜக சட்டமன்ற கட்சித்தலைவர் நயினார் நாகேந்திரன்: சபாநாயகர் பேசியதை கேட்டுத்தான் ஆளுநர் வெளிநடப்பு செய்தார். மரபின்படி தான் கவர்னர் நடந்து கொண்டார். முதலில் தேசிய கீதம் பாடவேண்டும் என்ற ஆளுநரின் கோரிக்கையை ஏற்றால் எ ன்ன தவறு?
இவ்வாறு அவர் கூறி்னார்.
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறும்போது, இன்றைய நிகழ்ச்சியை சீர்குலைத்துள்ளார் கவர்னர் ரவி. அவர் சபைக்கு வராமலேயே இருந்திருக்கலாம் என்றார்.