சட்டமன்றத்தில் அமளி செய்ததால், அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர். வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
மக்கள் பிரச்சினைகளை கூறுவதே எதிர்க்கட்சிகளின் கடமை. ஆனால் இன்று மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச எனக்கு அனுமதி தரவில்லை. மக்களை பற்றி அரசுக்கு கவலை இல்லை.குடும்பத்தைப் பற்றி மட்டுமே தி.மு.க. அரசு கவலை கொள்கிறது.
உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக பேச சட்டசபையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காவலரையே கொலை செய்யும் அளவிற்கு போதைப்பொருள் வியாபாரிகள் தைரியம் பெற்றுள்ளனர். போதைப்பொருளை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை சுதந்திரமாக விற்பனை செய்கின்றனர். காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும். தி.மு.க.ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. இன்றைய தினம் எங்களை திட்டமிட்டு சட்டசபையில் இருந்து சபாநாயகர் வெளியேற்றியுள்ளார். எவ்வளவு பிரச்னையாக இருந்தாலும் துணை முதல்வரின் பதிலுரை தடை படக்கூடாது என்று நினைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
7