தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் 6ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இது இந்த வருடத்தின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் கூட்டம் தொடங்கும். எனவே பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கவர்னர் ரவிக்கு, சபாநாயகர் அப்பாவு முறைப்படியான அழைப்பு விடுத்தார். இதற்காக அவர் இன்று காலை கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னரை சந்தித்தார்.