திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள் இன்று (03.02.2024) தமிழக அரசு சார்பிலும், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனைதொடர்ந்து ஸ்பெயினில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். உடன் துர்கா ஸ்டாலின், தொழில்துறை
அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோர் உடனிருந்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது X-தளத்தில் கூறியதாவது…. தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக – அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள். இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்! எண்ணித் துணிக கருமம்! என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.