Skip to content
Home » சீமானுக்கு எதிராக வாக்குமூலம்… திருச்சி கோர்ட்டில் டிஐஜி வருண்குமார்..

சீமானுக்கு எதிராக வாக்குமூலம்… திருச்சி கோர்ட்டில் டிஐஜி வருண்குமார்..

  • by Authour

திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பேசி வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் டிஐஜி வருண்குமாரின் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 ல் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு சம்பந்தமாக இன்று 30 ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதி  பாலாஜி தெரிவித்திருந்த

நிலையில், இன்று திருச்சி டிஐஜி வருண்குமார் நேரில் ஆஜராகி நீதிபதி பாலாஜி முன்பு தன்னுடைய விளக்கத்தை அளிப்பதற்கு திருச்சி நீதிமன்றத்தில் நேரில் தற்போது ஆஜராகி உள்ளார். தனது தரப்பு விளக்கத்தை நீதிபதியிடம் விரிவாக ஆதாரங்களுடன் எடுத்துரை எடுத்து வருகிறார்.