கலைஞர் கருணாநிதியை விமர்சனம் செய்த நாதக நிர்வாகி சாட்டைதுரைமுருகனை திருச்சி போலீசார் கைது செய்தனர். அப்போது சாட்டை துரைமுருகன் மற்றும் சீமான் ஆகியோர் பேசிய ஆடியோக்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக திருச்சி எஸ்பி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை நாம் தமிழர் நிர்வாகிகள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும் விமர்சனம் செய்துவருகின்றனர். இவ்வாறு விமர்சனம் செய்யும் ஐடிகளை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் தொடர்ந்து எஸ்பி வருணை நேரடியாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் காக்கி சட்டையை கழற்கி வைத்துவிட்டு வருமாறு சவால் விடுத்து சீமான் பேசியிருப்பதற்கு வருண்குமார் ஐபிஎஸ் நேற்று பதில் அளித்துள்ளார்.
திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல. IPS பதவி. கடினமாக உழைத்து, இரவு பகலாக படித்து, ரத்தம் வேர்வை கண்ணீர் சிந்தி, சொந்த உழைப்பில் வாங்கிய வேலை. பெற்றோரின் கருணையால், உரப்புலி குலதெய்வத்தின் அருளால் UPSC CSE 2010ல் All India Rank 3 எடுத்ததை நினைவு கூறுகிறேன். உயிரைப் போல் நேசித்து தேர்ந்தெடுத்த காக்கிச் சட்டை மீது உள்ள காதல் என்றும் தொடரும். பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது, நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால், நான் காக்கிச் சட்டையை கழற்றுவது பற்றி யோசிக்கிறேன். நான் காக்கிச் சட்டையில் இருப்பது அவ்வளவு பயமோ? என வருண்குமார் ஐபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.