விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையில் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த சுமார் 70 நபர்களுடன் திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் இன்று ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் விநாயகர் சிலை வைத்தல் மற்றும்
சிலை ஊர்வலம் போன்ற நடைபெறவுள்ள நிலையில் இதில் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் பற்றி தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.
மேலும் விழாவில் எந்தவித அசம்பாவிதம் ஏற்படாத வண்ணமும் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.