சோயாவில் இருந்து கிடைக்கும் புரதம், அசைவ உணவிற்கு இணையானது. சோயாவை சாகுபடி செய்து சத்தான உணவு உண்போம். மகசூல் பெறுக மாசிபட்டத்தில் விதைப்போம் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் யோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. சோயாவில் அதிகமான புரதமும், குறைவான கொழுப்புச்சத்தும் காணப்படுகிறது. பால், முட்டை மற்றும் இறைச்சிக்கு இணையான புரதச்சத்து கிடைக்கிறது. சோயா பயறுவகை பயிராகவும்,
எண்ணெய் வித்து பயிராகவும் பயரிடப்படுகிறது. பொதுவாக பயறுவகைகள் புரதச்சத்து நிறைந்தவை. இதில் மற்ற பயறுகளில் 25 சதம் புரதமும், சோயாவில் 40 சத புரதமும் காணப்படுகிறது. எனவே மாசிபட்டத்தில் மகத்தான மகசூல் பெற சோயா சாகுபடி செய்து புரத உணவுக்கு புத்துயிர் ஊட்ட விவசாயிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா அழைப்பு விடுத்துள்ளார்.