Skip to content
Home » சவுதியில் உயிரிழந்த கூலித்தொழிலாளி உடலுக்கு பாபநாசம் எம்எல்ஏ அஞ்சலி..

சவுதியில் உயிரிழந்த கூலித்தொழிலாளி உடலுக்கு பாபநாசம் எம்எல்ஏ அஞ்சலி..

  • by Senthil

தஞ்சை மாவட்டம், சுவாமிமலையை அடுத்த நாகக்குடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (54). கடந்த 25 ஆண்டுகளாக சவூதி அரேபியா நாட்டில் வேலை செய்து வந்தார். கடந்த ஜனவரி 1 ஆம் தேதி இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு ரியாத் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜனவரி 11 ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.  ஆஸ்பத்திரியில் இறந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என்று மாரிமுத்து மனைவி பாமா பாபநாசம் எம்.எல்.ஏ வும், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவருமான எம். எச். ஜவாஹிருல்லாவிடம் கோரிக்கை மனு வழங்கினார்.

இதனை தொடர்ந்து நேற்று காலை சென்னை வந்த மாரிமுத்துவின் உடலை அவரது மகன் கேசவன் மற்றும் அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டு, ஜவாஹிருல்லா எம்எல்ஏ ஏற்பாடு செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆம்புலன்ஸ் மூலமாக நாகக்குடி கிராமத்துக்கு கொண்டு வந்து அவர் குடும்பத்தினர் இறுதி சடங்குகள் செய்தனர். இறந்த மாரிமுத்து வின் உடலை ஊருக்கு கொண்டு வர முயற்சி மேற்க் கொண்ட பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லா வுக்கு அவரது குடும்பத்தினரும், ஊர் மக்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இறுதிச் சடங்கு நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் ஹிபாயத்துல்லா, பாபநாசம் எம்எல்ஏவின் உதவியாளர் முஹம்மது ரிபாயி, சுவாமிமலை பேரூர் தலைவர் புர்கான் அலி, முஸ்தபா உட்பட கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!