Skip to content

தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவராக அமுதா நியமனம்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நாளை பொறுப்பேற்க உள்ளார் . 34 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றும் அமுதா, வடகிழக்கு பருவமழை தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

error: Content is protected !!