Skip to content
Home » தஞ்சை, அரியலூரில் சொர்க்கவாசல் திறப்பு விழா

தஞ்சை, அரியலூரில் சொர்க்கவாசல் திறப்பு விழா

  • by Authour

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தஞ்சையில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு தஞ்சை நாலு கால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் பள்ளி அக்ரஹாரம் வீர நரசிம்மர், மணி குன்ற பெருமாள் மற்றும் நீல மேகப் பெருமாள் கோயில் உட்பட தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

இதை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தஞ்சை நாலு கால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், பள்ளி அக்ரஹாரம் வீர நரசிம்மர், மணிக்குன்ற பெருமாள், நீலமேகப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி காலை நாலு முப்பது மணி அளவில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

அரியலூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அருள்மிகு ஆலந்துறையார் கோதண்ட ராமசாமி திருக்கோவிலில் பரமபத வாசல் திறப்புவிழாவை முன்னிட்டு, நம்பெருமாள் எழுந்தருளி, பரமபதவாசல் திறப்பு மற்றும் ஆழ்வாராதிகள் மோட்சம் சேவை நடைபெற்றது. மூலவர் சன்னிதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீவெங்கடேசப்பெருமாள் ஊர்வலமாக சொர்க்கவாசல் கதவிற்கு எழுந்தருளினார். அங்கு பெருமாளுக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் சொர்க்கவாசல் கதவுதிறந்து ஸ்ரீசீனிவாசப்பெருமாள் நம்மாழ்வாருக்கு காட்சியளித்தர். இதனைத்தொடர்ந்து சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி ஸ்ரீசீனிவாப்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரகணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று நாமகோஷமிட்டு சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை தரிசித்தனர். பின்னர் பொதுமக்களும் சொர்க்கவாசல் வழியாக வந்து இறைவனின் அருளாசி பெற்றனர். இதனையடுத்து பெருமாள் கண்ணாடி சேவை நடைபெற்றது. பின்னர் மேளதாளங்கள் முழுங்க நம்மாழ்வாருடன், ஸ்ரீசீனிவாசப்பெருமாள் வீதியுலாவந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *