திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த ஆண்டு சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியின்போது இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஸ் ஜல்லிக்கட்டு விழா குழுவினரிடம் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் கூறியத அமைச்சர் மகேஸ், ஜல்லிக்கட்டு அரங்கம் ஒரு வருடத்தில் கட்டி முடிக்கப்படும் இதற்காக ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு மட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுகள் விளையாடும் வகையில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கமாக அது அமையும்.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மின்- டெண்டர் கோரியுள்ளது. இந்த பணியினை 9 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. டெண்டர் சமர்ப்பிக்க பிப்ரவரி 4ம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.