திருச்சி அடுத்த பெரிய சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 800 காளைகள் பங்கேற்று உள்ளன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் வந்துள்ளன. முதல் சுற்று போட்டி முடிவடையும் நிலையில்
மைதானத்தில் இருந்து வெளியேறிய காளை எதிரே வந்த பார்வையாளர் ஒருவரை முட்டித்தள்ளி தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவருக்கு அங்கேயே முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரின் பெயர் மணிகண்டன்(32) திருச்சி எடத்தெருவை சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்தது.