Skip to content
Home » சூர்யாவும் இல்ல..பட்லரும் இல்ல..ரோஹித் தான்.! வில்லியம்சன் அதிரடி கருத்து.!

சூர்யாவும் இல்ல..பட்லரும் இல்ல..ரோஹித் தான்.! வில்லியம்சன் அதிரடி கருத்து.!

  • by Authour

ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் முழு ஆதிக்கம் செலுத்தும் தற்போதைய சூழலில் டி20 போட்டியில் இரட்டை சதம் என்பது வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் புரிகிறது. நடந்து வரும் இந்த ஐபிஎல் தொடரில் 277, 283 போன்ற நம்ப முடியாத ஸ்கோர்களை நம்மால் பார்க்க முடிகிறது. அதே போல இந்த டி20 போட்டிகளிலும் ஒரு பேட்ஸ்மேன் இரட்டை சதம் விளாசுவது வெகு தூரத்தில் இல்லை என்பது மட்டும் புரிகிறது.

இந்த இரட்டை சத்தத்தை எந்த பேட்ஸ்மேன் அடிக்க போகிறார் என்று பேச்சும் சமூக தளத்தில் ரசிகர்கள் அவர்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சன் இதை பற்றி நேற்றைய போட்டிக்கு பிறகு பேசி இருந்தார். அவர் பேசுகையில், “டி20-யில் முதல் இரட்டை சதம் அடிக்க இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும், அவர் தொடக்க வீரர் என்பதால் இந்த இரட்டை சதம் என்பது அவர் அடிப்பதற்கு ஒரு முயற்ச்சியாவது எடுப்பர் என நான் நம்புகிறேன். ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதங்கள் அடித்த அனுபவம் ரோஹித்துக்கு இருப்பதால் இந்த டி20 இரட்டை சதம் அவருக்கு எளிதாக இருக்கும். எந்த நேரத்திலும் அவரது பேட்டிங்கில் இருந்து அந்த டி20 இரட்டை சதம் நாம் பார்க்க வாய்ப்பு உள்ளது.

இது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலேயே இந்த சாதனையை பதிவு செய்தாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. பட்லர், சூர்யகுமார் யாதவ், க்ளாஸன் போன்ற அதிரடி வீரர்களுக்கு முன்னதாகவே ரோஹித் டி20 போட்டிகளில் இந்த இரட்டை சதம் அடிப்பார் என்று நான் நம்புகிறேன்”, என்று நேற்று போட்டி முடிவடைந்த பிறகு பேசி இருந்தார்.

இதற்கு முன் ஐபிஎல் தொடரில் 2013 ஆண்டு கிறிஸ் கெயில், புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 66 பந்துகளுக்கு 175 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுதான் டி20 போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும், இதை அடுத்து வரும் எந்த பேட்ஸ்மேன் முறியடிக்கிறார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *