காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சோனியா காந்தி தற்போது உ.பி. மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதி எம்.பியாக உள்ளார். அவருக்கு 77 வயது ஆகி விட்டதால் இனி தேர்தல் களத்தில் தீவிர பிரசாரம் செய்ய முடியாது என்பதால் அவர் வரும் தேர்தலில் ரேபரேலியில் போட்டியிட விரும்பவில்லை. எனவே ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சோனியா மாநிலங்களவைக்கு போட்டியிட்டார். இன்று அவர் முறைப்படி எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ராஜஸ்தான் சட்டமன்ற செயலகம் அறிவித்துள்ளது.
