தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தன்குடி மேலையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அம்மாக்கண்ணு மகன் பரமசிவம் 78, விவசாயி. இவரது மகன் கண்ணன் 50, மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. நேற்று மாலை பரமசிவம் மகனை திட்டியதாக தெரிய வருகிறது. இதில் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்த கண்ணன் கோடாரியால் தந்தை பரமசிவத்தை வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இத் தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பரமசிவத்தின் பிரேதத்தை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தையை கோடாரியால் வெட்டிக்கொன்ற மகன்… தஞ்சை அருகே சம்பவம்….
- by Authour
