Skip to content

சூரியனின் மாற்றத்தை முன்கூட்டியே கண்டறியும் ஆதித்யா 1 செயற்கைக்கோள்…. விஞ்ஞானி மயில்சாமி

  • by Authour

சூரியனின் மாற்றங்களை முன்கூட்டியே கண்டறிய,இந்தியா அனுப்பிய பல்லாயிரம் கோடி மதிப்பிலான செயற்கைக்கோள்களை பாதுகாக்கவும் மற்றும் பருவநிலை மாற்றம் கண்டறியவும் ஆதித்யா 1 செயற்கைக்கோள் உதவும் என்று தெரிவித்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.

குலசேகரப்பட்டினத்தில் இருந்து நிறைய செயற்கைக்கோள்களை குறைந்த செலவில் விண்வெளிக்கு அனுப்பமுடியும்,சர்வதேச அளவில் முக்கிய இடமாக மாறும் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கரூரில் பேட்டி:

கரூர் மாவட்டம் தளவா பாளையம் தனியார் பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் சந்திரன்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர் மற்றும் தற்போது தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது:

உலகம் வெப்பம்மாதல் அதிகரித்து கொண்டே வருகிறது இதில் பெட்ரோல் டீசல் பயன்படுத்த முடியாத சுழல் ஏற்படலாம் பல நாடுகள் நிலக்கரி பயன்படுத்த கூடாது என்று கூறி உள்ளது.
இந்தியா அடுத்த கட்டமாக வெப்பமயம் இல்லாத எரிபொருளை உருவாக்குவதை முயற்சி செய்து வருகிறது.

சந்திராயன் மூன்று தென் துருவத்தில் செலுத்திய பின்பு உலக நாடுகள்இந்த இடத்திற்கு போட்டி போட்டு கொண்டு நகர்ந்து வருகிறது, அங்கே இருக்கக்கூடிய கனிம வளங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது,நிலவிலிருந்து ஒரு சில பொருட்கள் எடுத்து வருவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்ற தெரிவித்தார்.

குலசேகரபட்டினத்தில் இருந்து நிறைய செயற்கைக்கோள் அனுப்ப முடியும் பல்வேறு பகுதியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்த கட்டமைப்புகளை ஒன்று சேர்த்து குலசேகரப்பட்டினத்தில் அமைத்து குறைந்த செலவில் அனுப்ப முடியும்.
சர்வதேச அளவில் முக்கிய இடம் பெறும்

மனிதனை பூமியிலிருந்து நிலவுக்கு அனுப்பி, நிலவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப தேவையான மூலக்கூறுகள் இருக்கும் பட்சத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்ப திட்டமிடல் நடைபெற வாய்ப்பு உள்ளது,அதற்காக உலகத்தின் முன்னணியாக இருக்க சந்திரன் 3 இடம் பெற்றுள்ளது.

சந்திரன் 3 சென்ற இடத்தில் ஆக்ஸிஜன் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஆதித்யா ஒன் சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்டு இருக்கும்,ஒரு பக்கம் சூரியனை நோக்கி மறுபக்கம் பூமியை நோக்கியும் இருக்கும் இந்த ஆதித்யா ஓன் மின்கலம் சூரியன் உள்ள மாற்றங்களை நமக்கு முன்கூட்டியே அறிவிக்கும்,இதன் அடிப்படையில்,சூரியனில் ஏற்படக்கூடிய மாற்றங்களை முன்கூட்டியே கண்காணிக்கவும்,இந்தியா அனுப்பியுள்ள 60 ஆயிரம் கோடி மதிப்புள்ள செயற்கைக்கோள் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை பாதுகாக்க மற்றும் பருவ நிலை மாற்றம் கண்டறிய ஆத்தியா 1 செயற்கைக்கோள் பெறும் அளவு பயன் பெறும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!