திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஏரிக்கோடி பகுதியைச் சேர்ந்த திருப்பதி இவருக்கு இரண்டு மனைவிகள். அதில் முதல் மனைவியான அஞ்சலியின் மகன் திருநாவுக்கரசு (23) இவர் பலமுறை தனது தந்தையிடம் தனது சொத்தை விற்று பணம் தரும்படி கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை பணம் தராத காரணத்தால் ஆத்திரமடைந்த திருநாவுக்கரசு அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு மது போதையில் ஏரிக்கோடி பகுதியில் உள்ள 150 அடி செல்போன் டவரில் ஏறிக்கொண்டு தற்கொலை முயற்சியில்
ஈடுபட்டார்.
இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவலின் பெயரில் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி அட்ராசிட்டியில் ஈடுபட்ட திருநாவுக்கரசை கீழே இறக்கினர். மேலும் இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தந்தை சொத்து தராத காரணத்தால் மதுபோதையில் மகன் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி செய்து கொள்வதாக அட்ராசிட்டியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது..