Skip to content

கஞ்சா விற்ற மகன் கைது… கண்டித்து தந்தை போலீஸ் ஸ்டேசனில் தீக்குளிக்க முயற்சி..

  • by Authour

கோவை, கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகர் பொதுக் கழிப்பிடம் அருகே இளைஞர்கள் நேற்று கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் சோதனை செய்ததில் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் மற்றும் மணி பரத் என்ற இரண்டு இளைஞர்கள் கையில் கஞ்சாவுடன் பிடிபட்டனர்.

இதை அடுத்து அவர்களிடம் இருந்து சுமார் 107 கிராம் அளவு உள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து. கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தனது மகன் மணிபரத் மீது காவல் துறையினர் பொய்யாக கஞ்சா வழக்கு பதிவு செய்ததாக கூறி அவரது தந்தையான கவுண்டம்பாளையம் சிவாநகர் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு வந்து திடீரென தான் கையில் கொண்டு வந்து இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை அடுத்து அங்கு இருந்த போலீசார் உடனடியாக தீயை அணைத்து சேகரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக உள்ள சேகர் பாரத் சேனா அமைப்பின் நிர்வாகியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!