திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பாகத்திற்கு ஒரு இளைஞரை தேர்வு செய்து, சட்டமன்ற தொகுதி வாரியாக சமூகவலைத்தள பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மண்டலம் 5, 8ல் கீழ்காணும் 6 சட்டமன்ற தொகுதிகளில் சமூக வலைத்தள பயிற்சி நாளை(சனிக்கிழமை) நடைபெறுகிறது.
கரூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான பயிற்சி நாளை காலை 10மணிக்கு கரூர்(கோவை சாலை) பிரேம் மகாலில் நடைபெறும்.
கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதிகளுக்கான பயிற்சி மாலை 3மணிக்கு மணவாடி(வெள்ளியணை சாலை) எஸ்கேபி மகாலில் நடக்கிறது.
பரமக்குடி தொகுதிக்கான பயிற்சி பரமக்குடி உலகநாதபுரம் ஏ.பி. ஷா மகாலில் நாளை காலை 10 மணிக்கும், முதுகுளத்தூர் தொகுதிக்கான பயிற்சி முதுகுளத்தூர் யாதவர் திருமண மகாலில் மாலை 3 மணிக்கும் நடைபெறும்.
இந்த பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் தவறாமல் பயிற்சியில் பங்கேற்குமாறு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.