பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாக தமிழகம் கொண்டாடுகிறது. நாளை விடுமுறை தினம் என்பதால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் இன்று சமூகநீதி நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்”சமூகநீதிநாள்” உறுதிமொழியினைஆட்சியர் மு.அருணாதலைமையில் அரசு
அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன்,
ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன் ,தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அ.ஷோபா , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர்பாஷா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க. பிரேமலதா , மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
