திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. கலெக்டர் பிரதீப் குமார் இன்று திடீரென தேர்வு மையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:
திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்ததைத்தொடர்ந்து அவருடன் நெருக்கமாக இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை தனிமைப்படுத்தபட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது காய்ச்சல் நோயால் தினமும் 15 லிருந்து 20 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது திருச்சி மாவட்டத்தில் தொற்று நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. ஆகையால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் . முக கவசங்கள், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.