திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர லயன்ஸ் கிளப்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தியது. மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சித் தலைவர்
சிவ சௌந்தரவல்லி கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி கர்ப்பிணி பெண்களுக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கி இனிப்பு உள்ளிட்ட அறுசுவை உணவு ஊட்டினார்.
நிகழ்ச்சியில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி நகர செயலாளர் ராஜேந்திரன் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், மற்றும் பலர் கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பிடுதல் மற்றும் சீர்வரிசை வழங்கி ஐந்து வகை உணவு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.