திருச்சி மண்ணச்சநல்லுார் கணபதிபுரம் பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவரின் மனைவி சாருமதி(42). இவர் உளுந்தன்குடியில் உள்ள தனது தாயை பார்த்து விட்டு புள்ளம்பாடி வாய்க்காலில் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரின் கழுத்தில் அணிந்திருந்த 6.2 பவுன் தாலி சங்கிலி, மற்றும் 1 பவுன் தங்க சங்கிலி என்று ஏழேகால் பவுன் தங்க செயின்களை அறுத்துக்கொண்டு திருப்பைஞ்ஞிலியை நோக்கி பறந்து மறைந்து விட்டனர். இது குறித்து மண்ணச்சநல்லுார் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.