மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து முறையற்ற வகையில் தேயிலைக் கழிவுகள் கோவைக்கு கடத்தி வரப்படுவதாக குன்னூர் மண்டல தேயிலை வாரிய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கோவை துடியலூர் அருகே தேயிலை வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட நிலையில் சந்தேகத்துக்கு இடமான லாரியில் முறையற்ற வகையில் 13 ஆயிரத்து 600 கிலோ எடை உள்ள 10 லட்சம் மதிப்பு உள்ள தேயிலைக் கழிவுகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து லாரியில் இருந்த ஆவணங்களின் அடிப்படையில் அத்தேயிலைக் கடைகள் சென்று சேர வேண்டிய உரிமையாளர் வளாகத்திற்கு வாகனத்துடன் எடுத்துச் செல்லப்பட்டு மொத்த தேவைகளை உரிமையாளரின் இடத்தில் இறக்கி தேயிலை வாரிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அவற்றை முழுமையாக அளித்தனர். மேலும் தேயிலைகளை வாங்கியவர் அதனைப் பற்றிய முழு விவரங்கள் உரிய ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை முறையான விளக்கத்துடன் தேயிலை வாரியத்தில் சமர்ப்பிக்க மீண்டும் என அறிவுறுத்தி உள்ள அதிகாரிகள் கடந்த காலங்களில் அந்த நபர் கொள்முதல் மற்றும் விநியோகம் செய்த அனைத்து தேயிலை மற்றும் தேயிலை கழிவுகள் சம்பந்தமான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டு உள்ளனர். மேலும் கூறப்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின் உரிய முறையில் அதனை ஆய்வு செய்து அதன் நன்பகத் தன்மையை பொறுத்து தேயிலை வாரியத்தின் தற்போது நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த லாரியின் உரிமையாளர் மற்றும் ஓட்டுனரை எச்சரித்த ஆய்வு குழுவினர். இருக் குழுக்களாக பிரித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:Bengal tea newsillegal tea tradeகோவைதுடியலூர்மேற்கு வங்கம். தேயிலை பொருட்கள். கழிவுகள் பறிமுதல்