நெல்லைமாவட்டம் ராதாபுரம் அருகே உள்ளது ஆத்துக்குறிச்சி . இந்த கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது 3வயது மகன் சஞ்சய். இன்று காலையில் சிறுவன் திடீரென மாயமானான். அக்கம் பக்கம் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் ராதாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இந்த நிலையில் ஒருவர் விக்னேஷ் வீட்டில் இருந்த வாஷிங் மிஷினை பார்த்தார். அப்போது அதில் ஒரு சாக்கு மூட்டை தெரிந்தது. அந்த மூட்டையை திறந்து பார்த்தபோது அதற்குள் சிறுவன் சஞ்சய் சடலமாக இருந்தான். அவன் கொலை செய்யப்பட்டு கிடந்தான். இது குறித்து போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். அப்போது வீட்டில் வேலை செய்து வந்த பெண் தங்கம் என்பவர் மீது சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணையை முடுக்கி விட்டனர். அவர் தான் கொலை செய்தார் என்பது தெரியவந்ததால் தங்கத்தை கைது செ்ய்து விசாபணை நடத்தி வருகிறார்கள்.