பெரம்பலூர் மக்களவை திமுக உறுப்பினர் அருண் நேரு மக்களவையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பொருளாதாரம். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காரணங்களின் ஆய்வறிக்கையின்படி இன்றைய அன்றாட உலகில் குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உலக அளவில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபைகளின் அறிக்கையின்படி, இன்றைய பொருளாதாரத்தில் 90% உலகளாவிய பொருளாதார வணிகங்களுக்கும், 60% முதல் 70% வேலைவாய்ப்புகளுக்கும், 50% உலகளாவிய உள்நாட்டு உற்பத்திக்கும் (GDP) இந்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தான் மூலதனமாகவும், முதுகெலும்பாகவும் உலக அளவில் குறிப்பிடத்தக்க பொருளாதாரப் பங்களிப்பைச் செய்கின்றன.
குறிப்பாக உழைக்கும் ஏழை வர்க்கத்தினர், பெண்கள், இன்றைய இளந்தலைமுறையினர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு இந்தியாவில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) சூழ்நிலைக்கேற்ப நெகிழ்வுத்திறன் கொண்டவைகளாய். நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை அளித்து வருகின்றன.
2017-18 ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29.7% குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்காக இருந்தது. அதுவே 2018-19 மற்றும் 2019-20 என இரண்டு வருடத்தில் மொத்த நிகர மதிப்பு 30.5% ஆக உயர்ந்தது. திடீரென உருவான கொடிய கொரோனா தொற்று நோய் காலத்திலும், அதாவது 2020-21 ம் ஆண்டு கூட, 27.2% மொத்த மதிப்புக் கூட்டலைத் தக்க வைத்தது.மேலும், இந்த நிலை 2021-22-ல் 29.1% ஆக உயர்ந்தது. இது பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உந்துவதில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முக்கியப் பங்களிப்பைச் சுட்டிக் காட்டுகிறது.
இந்நிறுவனங்கள் தற்போது 29%-க்கும் மேலான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 50%க்கும் காரணமாக உள்ளன. மேலும், இந்நிறுவனங்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 1/3 என்ற விகிதத்தில் செயல்படுகிறது. தற்போதைய அறிக்கையின்படி 11.1 கோடி வேலைகளில் 360.41 லட்சம் வேலை வாய்ப்புகளை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) உருவாக்கி. இந்தியாவில் 62% வேலைவாய்ப்புகளில் பங்களிக்கின்றன. மேலும் கூடுதல் உத்வேகத்தை வழங்கும் என்பது உறுதி.
இவற்றின் முக்கியத்துவம் இருந்தபோதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மலிவு கடன், தாமதமான பணம் மற்றும் அதிக இணக்கச் செலவுகள் ஆகியவற்றை அணுகுவதில் இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக குறைந்த அளவு முதலீட்டுடன் செயல்படுவதால் அவர்களின் நிலைத்த தன்மை வளர்ச்சி தடுக்கப்படுகிறது. இத்தகைய நிலையை சரிக்கட்ட இந்த மசோதா ஒரு ஒருங்கிணைந்த நிதியுதவியை வழங்குவதன் மூலம் பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பதை நோக்கமாக்க கொண்டுள்ளது.
இந்த மசோதாவிலுள்ள ஷரத்துகள், சட்டசிக்கல்களை குறைத்தல் மற்றும் நெகிழ்வான கடன் தீர்வுகளைச் செயல்படுத்துதல், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) ஒருங்கிணைந்த நிதியுதவியை வழங்குதல் ஆகியவற்றை முன் மொழிகின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல்வேறு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் போட்டிப்போட்டு செயல்படும் ஒரு வங்கியாகவே செயல்படுகிறது.
பணப்புழக்கம் நிலுவையில் இல்லாமல் உடனுக்குடன் நிவர்த்தி செய்கிறது. இதனால் இத்தகைய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சிறப்பான செயல்பாட்டால் 3 கோடி வரை பிணையில்லாக் கடன் வழங்கவும், மசோதா முன்மொழிகிறது அரசு. அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் பங்கு மூலதன வரவை அதிகரிக்க, சட்டரீதியாக ஊக்கத் தொகையைக் கொடுக்க முனைகிறது. இந்த நடவடிக்கைகளால் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) மலிவு கடன் வழங்குவது உறுதி செய்யப்படும். இதன் மூலம் உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளில் அவற்றின் நிலை, உற்பத்திதிறன் மற்றும் போட்டியிடும் தன்மையை ஆதரித்து, உயர்த்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.