சிக்கிம் சட்டசபைக்கு பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. அதில் மொத்தம் உள்ள 32 இடங்களில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி (எஸ்கேஎம்)31 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு(எஸ்டிஎப்) ஒரு இடம் மட்டும் கிடைத்தது. மற்ற கட்சிகளுக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை.
இந்த தேர்தலில், ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த ஓட்டு விவரங்கள் வெளியாகி உள்ளன. அதில்,
எஸ்கேஎம் கட்சிக்கு 58.38 சதவீதம்
எஸ்டிஎப் கட்சிக்கு 27.37 சதவீதம்
பா.ஜ.,வுக்கு 5.18 சதவீதம்
நோட்டாவுக்கு -0.99 சதவீதம்
காங்கிரசுக்கு-0.32 சதவீதம்
மற்றவர்கள் 7.77 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளனர்.
இந்த தேர்தலில், நோட்டாவுக்கும் குறைவான ஓட்டுகளை காங்கிரஸ் பெற்றுள்ளது, அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்து உள்ளது.