கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயத்தில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ ஏகாம்பரி ஈஸ்வரி ஸ்ரீ மகாமாரியம்மன் ஸ்ரீ கருப்பண்ண சுவாமி தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது.
கோவில் திருப்பணிகள் நடைபெற்று இன்று கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
புனிதநீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஸ்வர பூஜை பீம் சுத்தி ரக்ஷா பந்தனம் நாடி சந்தனம் மகா பூர்ணாகுதி உள்ளிட்ட 4 கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர். இன்று 4ம் கால யாக வேள்வி முடிவடைந்ததும் புனித நீர் கும்பத்தினை சிவச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்க்கு புனித நீரினை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. சுவாமி மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு அர்ச்சனை, ஆராதனைகளும் நடைபெற்றன.அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டன.
இந்த கும்பாபிஷேக விழாவில் சிவாயம் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.