அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அரியலூர் மாவட்டத்திலும் தமிழக அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் செந்துறை ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, பிலாக்குறிச்சியில் செந்துறை-ஜெயங்கொண்டம் நகரப் பேருந்து (18ஏ) வீராக்கனிலிருந்து பிலாக்குறிச்சி வரை கூடுதல் நடை பேருந்து இயக்கத்தினையும் தொடங்கி வைத்தார். மேலும், இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழரசன், விஜயகுமார், ஊராட்சி மன்றத்தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.