கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் தனியார் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் உயிரிழந்தது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
சிவராமனை போலீசார் கைது செய்யும்போது தப்பி ஓடிய சிவராமன் தடுமாறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கடந்த 19.8.2024-ம் கைது செய்யப்பட்ட சிவராமன் எலும்பு முறிவு காரணமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
போலீசார் கைது செய்வதற்கு முன்பு சிவராமன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் இவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 09.07.2024 ம் தேதி எலி மருந்து சாப்பிட்டு TCR மருத்துவமனை கிருஷ்ணகிரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.