கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பத்தில் ஒரு தனியார் பள்ளியில் என்.சி.சி. முகாம் என்ற பெயரில் போலி முகாம் நடத்தப்பட்டது.. அதில் பங்கேற்ற 8ம் வகுப்பு மாணவி, போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் 13 மாணவிகளுக்கு சிவராமன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சிவராமன் மற்றும் சம்பவத்தை மறைத்ததாக பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட மொத்தம் 11 பேரை பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கைதாவதற்கு முன் கைதுக்கு பயந்து, சிவராமன் எலி பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதனால் சிவராமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், விஷம் தின்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முக்கிய குற்றவாளி சிவராமன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். பாலியல் வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி உயிரிழந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை அடுத்த கட்டத்திற்கு எப்படி செலலும் என்பது இப்போது கேள்விக்குறியாகி உள்ளது.
இதனிடையே நாதக நிர்வாகி சிவராமனின் தந்தையும் இன்று விபத்தில் உயிரிழந்தார். அவரது பெயர் அசோக்குமார்(63) அவர் நேற்று இரவு 11 மணி அளவில் இரு சக்கரவாகனத்தில் சென்றபோது காவேரிப்பட்டணம் என்ற இடத்தில் தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காணமடைந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இன்று அதிகாலை 5.30 மணி அளவில் அசாக்குமாரும் இறந்தார்.
தந்தையும், மகனும் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.