உலக யோகா தினமான இன்று சிவகாசியில் உள்ள ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் 1500 மாணவ மாணவியர் ஒன்று கூடி ஒரே நேரத்தில் 20 வகையான யோகாசனங்கள் செய்தனர். ஏகபாதசனம், ஹலாசனம் , சக்ராசனம் , தடாசனம் , சிரசாசனம், வீரபத்ராசனம் உள்ளிட்ட 20 வகையான ஆசனங்களை சுமார் 1 மணி நேரம் இடைவிடாது செய்து அசத்தினர். பல்வேறு வண்ணங்களில் சீருடை
அணிந்தபடி YOGA DAY என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட எழுத்தை வடிமைத்து யோகாசனம் செய்து யோகாசனம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் பிரம்மாண்டமான பருந்து பார்வையில் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.