கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இருந்தும் இன்னும் சில காரணங்களால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருக்கிறது.
இந்த நிலையில், படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
WELCOME ONBOARD @GVPRAKASH FOR MISSION #SK21 ! #ULAGANAYAGAN #KAMALHAASAN #SIVAKARTHIKEYAN #SK21JOININGFORCES #RKFIPRODUCTIONNO_51
@IKAMALHAASAN @SIVA_KARTHIKEYAN #MAHENDRAN @RAJKUMAR_KP @GVPRAKASH @SAI_PALLAVI92 @RKFI @LADASINGH PIC.TWITTER.COM/0WCPOXHFOQ— RAAJ KAMAL FILMS INTERNATIONAL (@RKFI) MAY 3, 2023
படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் காஷ்மீர் சென்று ராணுவ பயிற்சி எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகினது. இதற்கு முன்பு படத்தின் தயாரிப்பாளர் கமலஹாசன் ஆளவந்தான் திரைப்படத்தில் ராணுவ அதிகாரியாக நடிப்பதற்காக ராணுவ பயிற்சிக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்க்கது.
இதற்கிடையில், சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஷ்வின் இயக்கும் ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். மேலும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.