ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்கே 23’ படத்தில் 14 ஆண்டுகள் கழித்து கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் மலையாள நடிகர் பிஜூ மேனன்.

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகை ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்கிறார். ரூ.70 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜமால் இணைந்துள்ள நிலையில், பிரபல நடிகர் பிஜூ மேனன் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ‘அமரன்’ படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜன் மறைந்து 10 ஆண்டுகள் ஆனதை ஒட்டி நேற்று இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் அவருக்கு மரியாதை செலுத்தினர்.